பெண்கள்:
தீப்பெட்டிக்குள் அடைக்கப்பட்ட தீக்குச்சிகள்
காணிக்கை:
எப்படியும் விடிய போகும் இரவிற்கு
கடவுளுக்கு கொடுக்கப்படும் லஞ்சம்
கடற்கரை மணல்:
குழந்தையின் மணல் துகள் குவியலில்
முதல் கனவு வீடை கட்டும் அப்பா
நாணம்:
நீ இமை மூடும் போது எனக்கு ஏற்பட்ட மின்வெட்டு
நாணம் என் ஊனம் ஆனது
பிரம்மனின் பிழை
வெப்பம்:
அழகாய் தோன்றி
அமைதியாய் மறைகிறாய்
நடுவில் ஏன் இந்த ஆரவாரம்
தொலைவு:
இரக்கமற்ற தொலைவு
உறக்கமற்ற இரவுகள்
முதியோர் இல்லத்தில் தாய்
தேடல்:
கற்றது ஒன்னேமுக்கால்
பெருவது ரெண்டேமுக்கால்
வரதட்சனை வேட்கையில்
வருங்கால வாலிபர்கள்
தாஜ்மகால்:
மனைவி இறந்தற்காக கணவன் கட்டிய வெள்ளை புடவை
வறுமை:
சட்டைக்கு கஞ்சிப்போட்டேன் எதிரே பசியோடு ஏழைச் சிறுவன்!
சிறை:
என் இதயத்தை திருடியது நீ
சிறைபட்டேன் உன் புன்னகைக்கு கைதியாய்
முத்து :
உன் பெயரைக் கடற்கரை மணலில் எழுதினேன்
அலை அடித்து சென்றது முத்து கடலுக்கே சொந்தமாம்
பந்தயம்:
பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்
ஆனால் உன் ஆருகில் சென்றபின்
முந்திக்கொண்டு ஜெய்த்தது மௌனமே
அலுவலகம் :
இரு கண்கள் கண்ட கனவை
பல கண்கள் நிறைவேற்றும் கூடு
நிழல்:
நிழலை கண்டு பயந்தேன் சிறு வயதில்
இன்று நானே மாறினேன் நிஜமில்லாத நிழலாய்
வறுமையில் இன்றைய இளைஞன் :
பாரதியுடன் வறுமையில் துணை நின்ற
செல்லம்மாவின் திருமண வயது ஏழு
இன்று செல்லம்மாக்கள் இல்லை
ஆனால் பாரதிகள் உண்டு
No comments:
Post a Comment