Tuesday, October 14, 2025

ஹைக்கூ கிறுக்கல்கள்-பாகம் 4

Nee
“நீ” என்பது வெறும் வார்த்தை அதற்கு நீ தான் அழகு ஊட்டுகிறாய்

Source
பூக்கடையில் புத்தம் புது பூ மாலை ஒன்று கேட்டதாம்...
“நான் யாரிடம் செல்லப் போகிறேன் சாமியிடமா? சடலமிடமா?”

Destination 
அவ்வளவு பெரிய வானம் இருந்தும் 
பறவை தேடியது அதன் கூட்டை

Solitude
தனிமையாக இருந்தால் அமைதியாக இருக்கும் அமைதி இருக்காது

New Age Gita
எதை நீ விட்டு செல்கிறாயோ 
அதையே நீ கொண்டு செல்வாய்!

Shade
நிழல் தரும் மரத்திற்கு யார் நிழல் தருவார்?

Memories
எவ்வளவு வேகமாக சென்றும் நதியினால்
இழுத்துச் செல்ல முடியவில்லை
தன் மீது இருக்கும் நிலவின் பிம்பத்தை

Death is colorful 
வண்ணமில்லாத பட்டாம்பூச்சி எதிர் வந்த வாகனத்தில் மோதியது 
இறந்த பின் அதன் வண்ணம் சிவப்பு

Seek and Hide
காகிதத்தில்
எழுதும்
காதலை
என்னால்
மனதில்
காட்ட முடியவில்லை

Coffin box
நான் இழந்ததை எல்லாம் ஒரு பெட்டிக்குள் வையுங்கள் 
யாரோ ஒருவர் அதை திறக்கையில் என்னை காணட்டும்

Love hurts
மன்னியுங்கள்! அன்பாக இருந்து விட்டேன்

Unpredictable 
விடி காலை நேரங்களில் ஒரு உன்னதம் இருக்கிறது 
வரப்போகும் இருளை அறியாமல் பூக்கிறது சூரியன்

Painful Healing
ஆறிவிட்ட காயம் தான் அவ்வப்போது வலிக்கிறது

Oxbow Lake
உன் நினைவுகள் போலே, நான் தனிமையில் மிதந்தேன்,
நதி வளைவாய் ஓடி, உன்னை தேடி வந்தேன்.

Aasai
எனது நாட்குறிப்பிற்கு நடுவில் மறைத்து வைத்திருந்த 
மயிலிறகாய் நீ 
ஏமாற்றப்பட்ட சிறுவனைப் போல் நான்

Coward
இந்த காதல் கடிதங்களில் எல்லா பக்கங்களும் நிரம்பிவிட்டன 
பெறுநர் இடத்தில் மட்டும் ஒரு வெற்றிடம்

Kaatrukenna Velli
வேலி தாண்டி வந்த காத்த 
வெறுங்கைய்யா அனுப்பாதைய்யா

First Love
இதுவரை காதலிக்காத ஒருவனுக்கு 
அவன் கேட்ட போதெல்லாம் 
காகிதத்தில் கவிதை வரும் போது 
காதலை உணர்கிறான்

Freedom
இழப்பு சுதந்திரமானது 
உன் பிடியை இழந்த பட்டம் வானத்தில் பறக்கிறது 
உன் பாதங்களை இழந்த அலைகள் மீண்டும் கடலோடு சேர்கிறது

Jananam-Maranam
இலைகளை உதிர்த்த மரம் 
இறப்பை குறிப்பதா? 
வரப்போகும் பிறப்பை குறிப்பதா?

Mirror
உடைந்து போன கண்ணாடி துகள்களில் நட்சத்திரங்களாக தெரிகிறது நிலவு

Beware of Thieves
இரவை பத்திரமாக பார்த்து கொண்டதற்கு மாதம் ஐம்பது ரூபாய் கூர்காவிற்கு

No comments:

Post a Comment