உரிமையில்லா ரசனை
யாருக்காகவோ எழுதிய உன்னை,
மிக அழகாய் ரசித்தவள் நான்..!!
யாருக்காகவோ எழுதிய உன்னை,
மிக அழகாய் ரசித்தவள் நான்..!!
ரசிக்க மறந்த மனம்
முன்பு போல் பிடித்த பாடல்களைக் கூட முழுசாக கேட்பதில்லை...
முன்பு போல் சிரிப்பதில்லை...
முன்பு போல் யாரிடமும் மனம் திறப்பதில்லை...
முன்பு போல் யாரிடமும் கோபப்படுவதில்லை...
முன்பு போல் இரவில் தூங்குவதில்லை...
முன்பு போல் மழையை ரசிப்பதில்லை...
முன்பு போல் நிலவு தனிமையை போக்குவதில்லை...
முன்பு போல் கடல் அலைகள் அமைதியை தருவதில்லை...
முன்பு “நாளை மாறிவிடும்..." என்று நம்பியவள்
இன்று "இந்த நாள் முடிந்தாலே போதும்..." என்று வாழ்கிறாள்...
சத்தமில்லா சிதறல்
சில மனங்கள் உடையும் போது சத்தம் வருவதில்லை
சிறகுகளின் சுதந்திரம்
வண்ணத்துப்பூச்சி என் கையில் இருக்கும் போதே ரசித்தவன் நான்,
பறந்து சென்ற பிறகு வெறுப்பதில் என்ன நியாயம்...??
என் புத்தகம்
நான் தேர்ந்தெடுத்த புத்தகத்தை வேறொருவர் படிக்கலாம். ஆனால் நான் புரிந்து படித்த அளவிற்கும், நான் ரசித்த அளவிற்கும் அவரால் ரசிக்க முடியாது.
கடக்க முடியாத தூரம்
உன்னை யாரோ போல கடந்து விடும் தைரியம் எனக்கு இல்லை...!
தொலைவாகவே இரு..!!
விடுவிப்பு
அழகான புத்தகம்…
ஆனால் படிக்கத் தெரியாத நான்,
வாங்கியதும் திருப்பிக் கொடுத்துவிட்டேன்…
படிக்கத் தெரிந்தவர்கள் படிக்கட்டுமே..!
நஞ்சு
பயம்
உன்னை கொன்று விடும் என்றார்கள்.
அன்பும்
அதை தானே செய்கிறது.
நிழல்கள்
இந்த உறவுக்குப் பெயர் ஒன்றும் அவசியமில்லை…
நினைவுகளில் ஒன்றாக வாழும் ஜோடி.
நினைவுகளில் ஒன்றாக வாழும் ஜோடி.
No comments:
Post a Comment